Tamil Guide
பல் எடுத்தல் (Tooth Extraction)
Comprehensive guide for tooth extraction in Tamil.
பல் எடுத்தல் (Tooth Extraction)
சிகிச்சைக்கு முன்
- சுகர்/பிபி: உங்களுக்கு சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் இருந்தால், அது கட்டுப்பாட்டில் உள்ளதா என பரிசோதித்துவிட்டு வரவும்.
- உணவு: பல் எடுப்பதற்கு முன் கட்டாயம் சாப்பிட்டுவிட்டு வரவும் (வெறும் வயிற்றில் வரக்கூடாது).
- உதவி: முடிந்தால் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒருவருடன் வரவும்.
- உடை: இறுக்கமான உடை அணியாமல், வசதியான உடை அணிந்து வரவும்.
- தகவல்: ரத்தம் உறைவதை தடுக்கும் மாத்திரைகள் (Ecosprin போன்றவை) எடுக்கிறீர்கள் என்றால் மருத்துவரிடம் கூறவும்.
சிகிச்சைக்கு பிறகு
- பஞ்சு: வைக்கப்பட்ட பஞ்சை 1 மணி நேரம் இருக்கமாக கடித்துக்கொள்ளவும்.
- துப்பக்கூடாது: உமிழ்நீரை விழுங்க வேண்டும்; துப்பவே கூடாது. துப்பினால் ரத்தம் நிற்காது.
- குளிர்ந்த உணவு: 1 மணி நேரம் கழித்து பஞ்சை எடுத்துவிட்டு, ஐஸ்கிரீம் அல்லது ஜூஸ் குடிக்கலாம் (ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டாம்).
- வாய் கொப்பளித்தல்: முதல் 24 மணி நேரத்திற்கு வாய் கொப்பளிக்கவோ, பலமாக பல் துலக்கவோ கூடாது.
- ஓய்வு: இரண்டு நாட்களுக்கு கனமான வேலைகளை செய்ய வேண்டாம்.