Tamil Guide
வேர் சிகிச்சை (Root Canal Treatment)
Comprehensive guide for Root Canal Treatment in Tamil.
வேர் சிகிச்சை (Root Canal Treatment)
சிகிச்சைக்கு முன்
- உணவு: சிகிச்சைக்கு வரும் முன் நன்றாக சாப்பிட்டுவிட்டு வரவும் (சிகிச்சைக்குப் பின் உடனே சாப்பிட முடியாது).
- மருந்துகள்: ஏற்கனவே வேறு நோய்களுக்கு மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால், அதை மருத்துவரிடம் கூறவும்.
- எக்ஸ்-ரே: பழைய எக்ஸ்-ரே (X-Ray) மற்றும் மருத்துவ குறிப்புகளை கொண்டு வரவும்.
- ஓய்வு: முதல் நாள் இரவு நன்றாக தூங்கி ஓய்வெடுத்திருக்க வேண்டும்.
- கேள்விகள்: சிகிச்சை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் தயங்காமல் கேட்கவும்.
சிகிச்சைக்கு பிறகு
- கடின உணவு: பல்லில் கேப் (Crown) போடும் வரை, அந்தப் பக்கத்தில் கடினமான உணவை கடிக்கக் கூடாது.
- மருந்து: மருத்துவர் கொடுத்த வலி நிவாரணி மற்றும் மாத்திரைகளை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.
- வீக்கம்: லேசான வீக்கம் இருந்தால், கன்னத்தின் வெளிப்புறத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.
- வாய் சுத்தம்: பல் துலக்கும்போது அந்த இடத்தில் மெதுவாக துலக்கவும்.
- கேப் (Cap): வேர் சிகிச்சை செய்த 10-15 நாட்களுக்குள் கண்டிப்பாக 'கேப்' (Crown) பொருத்திக்கொள்ள வேண்டும் (இல்லையெனில் பல் உடையும்).