LUMINA DENTAL

Book Appointment

Tamil Guide

பல் விதைப்பு (Dental Implant)

Comprehensive guide for dental implant in Tamil.

பல் விதைப்பு (Dental Implant)

சிகிச்சைக்கு முன்

  1. புகைபிடித்தல்: இம்பிளான்ட் வெற்றிபெற, சிகிச்சைக்கு முன் புகையிலை பழக்கத்தை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.
  2. ஸ்கேன்: மருத்துவர் பரிந்துரைத்த 3D ஸ்கேன் (CBCT) எடுத்து வரவும்.
  3. சர்க்கரை அளவு: சர்க்கரை நோய் (HbA1c) கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  4. மாத்திரை: சிகிச்சைக்கு முன் மருத்துவர் கொடுத்த ஆன்டிபயாடிக் மாத்திரையை போட்டு வரவும்.
  5. உணவு: காலை உணவு அல்லது மதிய உணவை நன்றாக சாப்பிட்டு வரவும்.

சிகிச்சைக்கு பிறகு

  1. தொடுதல் கூடாது: ஆபரேஷன் செய்த இடத்தை நாக்காலோ, விரலாலோ தொடக் கூடாது.
  2. மென்மையான உணவு: முதல் 3-5 நாட்களுக்கு இட்லி, பொங்கல், கஞ்சி போன்ற மென்மையான உணவுகளை மட்டுமே சாப்பிடவும்.
  3. ஒத்தடம்: கன்னத்தில் வீக்கம் இருந்தால் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.
  4. வாய் சுத்தம்: 24 மணி நேரம் கழித்து, உப்பு நீரில் மெதுவாக வாய் கொப்பளிக்கவும்.
  5. தையல்: 7-10 நாட்களில் தையல் பிரிக்க கிளினிக் வரவும்.